தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கல்லுாரியில் ஊக்குவிப்பு நிகழ்ச்சி

கல்லுாரியில் ஊக்குவிப்பு நிகழ்ச்சி

கல்லுாரியில் ஊக்குவிப்பு நிகழ்ச்சி


UPDATED : அக் 14, 2026 07:39 PM

ADDED : அக் 14, 2026 07:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 07:39 PM ADDED : அக் 14, 2026 07:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்: நத்தம் என்.பி.ஆர்., பொறியியல், தொழில்நுட்பக் கல்லுாரியில் ‘அறிவும் அறமும் - உண்மையான வெற்றியின் இரு துாண்கள்’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கான ஊக்குவிப்பு நிகழ்ச்சி நடந்தது.

பொறியியல் கல்லுாரி முதல்வர் செல்வபெருமாள், கலை, அறிவியல் கல்லுாரி முதல்வர் சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்விக்குழும மாணவர் விவகாரக்குழு பொறுப்பாளர் தேவி முன்னிலை வகித்தார். மாணவர் நலன் குழு ஒருங்கிணைப்பாளர் நாகமணி பங்கேற்றார்.

சிறப்பு விருந்தினராக பேச்சாளர் மஞ்சரி நாராயணன் பங்கேற்று பேசுகையில், ‘உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைவதற்கு தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். உண்மையான, நிலையான வெற்றியை பெற ஒழுக்கம், பொறுமை, செயல்திறன், வலுவான நோக்கம் ஆகியவை முக்கியம். அறிவுடன் அறநெறியும் இணைந்தால் தான் வாழ்க்கையில் சிறந்து விளங்க முடியும்’ என்றார்.

என்.பி.ஆர்., கல்விக்குழுமத்தை சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us