ADDED : நவ 28, 2024 06:24 AM
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் கிறிஸ்தவ கல்லுாரியில் நடந்த மாவட்ட ஜூடோ போட்டியில் ஒட்டன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 14 வயதிற்குட்பட்டோருக்கான 23 கிலோ எடை பிரிவு ,32 கிலோ எடை பிரிவில் முதல் இடம், 40 கிலோ எடை பிரிவில் 2ம் இடம், 17 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் 34 கிலோ எடை பிரிவில் முதல், 2ம் இடம் பிடித்தனர்.
19 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் 63 கிலோ எடை பிரிவு , 48 கிலோ எடைப்பிரிவில் முதலிடம், 38 கிலோ எடை பிரிவில் 2ம் இடம் பிடித்தனர்.
6 தங்கம், 2 வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். முதல் இடம் பிடித்த மாணவிகள் மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவிகள், உடற்கல்வி ஆசிரியை பியூலா ரோசி, ஜூடோ பயிற்சியாளர் ராஜபாண்டியன் ஆகியோரை தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி , ஆசிரியர்கள் பாராட்டினர்.