UPDATED : அக் 10, 2026 05:26 PM
ADDED : அக் 10, 2026 05:24 PM
அ நிறம் | அளவு
ஆயக்குடி: பழநி ஆயக்குடி விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவன் தருண்வெங்கட் 14, பழநியில் குறுவட்ட அளவில் நடந்த வட்டு எறிதல் போட்டியில் வெற்றி பெற்றார்.
தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த மாவட்ட அளவிலான வட்டு எறிதல் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து, மாநில அளவிற்கான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவரை பள்ளி தாளாளர் செல்வராஜ், முதல்வர் காசிஆறுமுகம், விளையாட்டு ஆசிரியர் பாலாஜி, ஆசிரியர்கள் பாராட்டினர்.
