/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் 19 கோயில் கடைகளுக்கு சீல்: ஆக்கிரமிப்பு கடைகள் இடிப்பு
/
பழநியில் 19 கோயில் கடைகளுக்கு சீல்: ஆக்கிரமிப்பு கடைகள் இடிப்பு
பழநியில் 19 கோயில் கடைகளுக்கு சீல்: ஆக்கிரமிப்பு கடைகள் இடிப்பு
பழநியில் 19 கோயில் கடைகளுக்கு சீல்: ஆக்கிரமிப்பு கடைகள் இடிப்பு
ADDED : மார் 01, 2024 06:31 AM

பழநி : பழநி கோயிலுக்கு சொந்தமான 19 கடைகள் கோயில் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு சீல் வைக்கப்பட்ட நிலையில்,பாளையம் விநாயகர் கோயிலை மறைத்துவைக்கப்பட்டஆக்கிரமிப்பு கடைகளும்இடித்து அகற்றப்பட்டன.
பழநி முருகன் கோயிலுக்கு சொந்தமான வணிக கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் வாடகைதாரர்கள் வழக்குதொடுத்தனர். இந்தவழக்கில் வாடகை காலம் முடிந்த நிலையில் வாடகைதாரர்களை வெளியேற்றிட நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த தீர்ப்பினை எதிர்த்து டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர விசாரணை நடந்தது. இது தொடர்பான 19 கடைகளை உடனே காலி செய்திடவும் மீதமுள்ள கடைகளை ஜூலை 31க்குள் காலி செய்யவும் பிப்.23 அன்று உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நேற்று கோயில் இணைக் கமிஷனர் மாரிமுத்து தலைமையில் 19 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
இதனிடையே பழநி பாளையம் பகுதி விநாயகர் கோயிலை மறைத்து ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்தஆக்கிரமிப்புக்காரர்களால்தொடரப்பட்டவழக்கில் உச்ச நீதிமன்றத்தில் கோயிலுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததையடுத்து கோயில் முன்பு இருந்தஆக்கிரமிப்புகடைகளை கோயில் நிர்வாகத்தினர்மண் அள்ளும் இயந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர்.இதை தொடர்ந்து பாளையம் விநாயகர் கோயில்பளிச்சிட பக்தர்கள் சுதந்திரமாக சென்று வணங்கினர்.கோயில்திருப்பணிகளை விரைவில் நிறைவேற்றி கும்பாபிஷேகம் நடத்த உள்ளதாகவும்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

