/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
செடிப்பட்டி கோயில் கும்பாபிஷேகம்
/
செடிப்பட்டி கோயில் கும்பாபிஷேகம்
ADDED : அக் 17, 2024 06:09 AM

கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே செடிப்பட்டி பொதியழகர் சுவாமி, நொண்டி சுவாமி, தொட்டச்சி அம்மன், பெரிய கருப்புசாமி, அய்யனார் சுவாமி, சின்ன கருப்பு சுவாமி கோவில் கும்பாபிஷேகவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி கோயிலில் யாகசாலையில் விநாயகர் பூஜை, மகா சங்கல்பம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
அதைத்தொடர்ந்து மேட்டுக்கடை திருவேங்கடஜோதி பட்டாச்சாரியார் தலைமையிலான குருக்கள், கோயில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது.
அப்போது வானில் கருடன் வட்டமிட்டது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் ஹரிகரன், ஊராட்சி தலைவர் கந்தசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணைத் தலைவர் ஆண்டிச்சாமி, ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் எம்.ராஜேந்திரன், துணைச் செயலாளர் சேகர், தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட இணைச் செயலாளர் ஜெயக்குமார் கலந்து கொண்டனர்.

