/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இதற்கோர் வழி காணுங்க: மயில்கள் அதிகரிப்பால் பாதிக்கும் விவசாயிகள்
/
இதற்கோர் வழி காணுங்க: மயில்கள் அதிகரிப்பால் பாதிக்கும் விவசாயிகள்
இதற்கோர் வழி காணுங்க: மயில்கள் அதிகரிப்பால் பாதிக்கும் விவசாயிகள்
இதற்கோர் வழி காணுங்க: மயில்கள் அதிகரிப்பால் பாதிக்கும் விவசாயிகள்
ADDED : பிப் 09, 2025 05:28 AM

மாவட்டத்தில் வனத்துறை நடத்திய சர்வேயில் மயில்கள் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்து உள்ளதாக தெரியவந்துள்ளது. மயில்கள் அதிகரிப்பால் முன்பு அரிதாக கிராம, நகரங்களில் பார்க்கக்கூடிய மயில்கள் தற்போது கூட்டம் கூட்டமாக திரிவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் விவசாயிகளுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.
நிலங்களில் பயிரிட்டுள்ள பழம், காய்கறி, தானியங்களை மயில்கள் அதிக அளவில் சாப்பிட்டு வருவதால் சாகுபடியில் லாபம் எடுக்க முடிவதில்லை என விவசாயிகள் குறைதீர் கூட்டங்களில் புகார் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் விளைநிலங்களுக்குள் மயில்கள் புகுந்து இரை தேடுவதால் பயிர்களும் சேதமடைவது தொடர் கதையாகிறது. பல இடங்களில் மயில்களை துரத்துவதற்காக வண்ண வண்ண சேலைகளை வேலியாக அமைத்து விரட்டி வருகின்றனர்.
ஆனால் இதற்கெல்லாம் மைல்கள் அச்சுறுவதில்லை. சேலை வேலிகளை கிழித்துக்கொண்டு விளை பொருட்களை சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு குறைந்த லாபமும் கிடைக்காமல் போய்விடுகிறது.