/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சீலப்பாடி விநாயகர் கோயில் கும்பாபிேஷகம்
/
சீலப்பாடி விநாயகர் கோயில் கும்பாபிேஷகம்
ADDED : செப் 06, 2025 03:59 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் சீலப்பாடி அரசமரத்தெருவில் உள்ள வரசக்தி விநாயகர், கருப்பணசுவாமி முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது. இதையொட்டி, மங்கள இசை, மஹா கணபதி, சுதர்ஸன, நவக்கிரஹ ஹோமம், பூர்ணாஹூதி, தீர்த்தம் அழைத்தல், முதல்கால யாக பூஜை, வேத திருமறை பாராயணம், மருந்து சாற்றுதல் நடந்தது.
தொடர்ந்து நேற்று காலை 5:50 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, கடம் புறப்பாடு நடந்தது. 9:15 மணி முதல் 10:20 மணிக்குள் கோயில் விமான கலசங்களுக்கு திண்டுக்கல் மலையடிவாரம் பத்திரகாளியம்மன் ஆலய தலைமை அர்ச்சகர் நாகராஜ் தலைமையில் மகா கும்பாபிே ஷகம் நடந்தது.
இதையடுத்து அன்னதானம், இரவு 10:00 மணிக்கு வள்ளி திருமணம் நாடகம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், ஊர்பொதுமக்கள், சுடர் இளைஞர் மன்றம், தீபம் மகளிர் மன்றத்தினர் செய்திருந்தனர்.