/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கூடுதல் மாணவர்களை ஏற்றிய ஆட்டோக்கள் பறிமுதல்
/
கூடுதல் மாணவர்களை ஏற்றிய ஆட்டோக்கள் பறிமுதல்
ADDED : பிப் 16, 2024 06:04 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கூடுதலாக பள்ளி மாணவர்களை ஏற்றிய 5 ஆட்டோக்கள்,ஆம்னி வேனை போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயகவுரி, வாகன ஆய்வாளர் இளங்கோ உள்ளிட்ட அதிகாரிகள் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட்,ஆர்.எம்.காலனி,பழநி ரோடு பகுதிகளில் ஆய்வு செய்தனர். 5 ஆட்டோக்கள்,ஒரு ஆம்னி வேனில் அதிக பள்ளி மாணவர்களை ஏற்றி வந்தனர். விசாரித்தபோது தகுதிச்சான்று உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் இருந்தது தெரிந்தது. 5 ஆட்டோ,ஒரு ஆம்னி வேனை பறிமுதல் செய்து ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தனர். பள்ளி மாணவர்களை அதிகளவில் ஆட்டோக்களில் ஏற்றி சென்றால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.