/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நஷ்ட ஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி
/
நஷ்ட ஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி
ADDED : மார் 06, 2024 06:21 AM
வேடசந்துார் : வேடசந்துாரில் விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காதஅரசு பஸ்சை ஜப்தி செய்தனர்.
வேடசந்துார் காக்காத்தோப்பூரை சேர்ந்தவர் சூரிய நாராயணன் 22. 2015 ஜனவரி 17 அன்று தேவகவுண்டன்பட்டி பிரிவு அருகே டூவீலரில் சென்றபோது அரசு பஸ் மோதி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றார். சூரிய நாராயணனின் தந்தை பாலமுருகன் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்தார். 2015 நவம்பர் 30 அன்று அரசு போக்குவரத்து கழகம் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இழப்பீட்டுத் தொகை வழங்காததால் வழக்கறிஞர் ராஜேந்திரன் மேல் முறையீடு செய்தார்.
வேடசந்துார் நீதிமன்றம் அரசு பஸ் ஒன்றை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதன்படி சிவக்குமார் தலைமையிலான ஊழியர்கள் வேடசந்துார் பஸ் ஸ்டாண்டில் நின்ற அரசு பஸ்சை ஜப்தி செய்தனர்.

