ADDED : அக் 05, 2024 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் பறக்கும் படை மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் தோமையார்புரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஹைதராபாத்தில் இருந்து மதுரைக்கு பயணிகளை ஏற்றி வந்த 2 ஆம்னி பஸ்சை மடக்கினர். அதன் டிரைவர்களிடம் ஆவணங்களை சரி பார்த்தபோது ரோடு வரி செலுத்தாமல் இருந்தது தெரிந்தது. 2 ஆம்னி பஸ்களையும் பறிமுதல் செய்து ரூ.2 லட்சம் அபராதம் விதித்தனர்.