/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பஞ்சாமிர்தம் லாரி சிறைபிடிப்பு பழனி கோவிலில் பரபரப்பு
/
பஞ்சாமிர்தம் லாரி சிறைபிடிப்பு பழனி கோவிலில் பரபரப்பு
பஞ்சாமிர்தம் லாரி சிறைபிடிப்பு பழனி கோவிலில் பரபரப்பு
பஞ்சாமிர்தம் லாரி சிறைபிடிப்பு பழனி கோவிலில் பரபரப்பு
ADDED : மார் 13, 2024 12:51 AM

பழனி:திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் அடிவாரம் கிரிவீதி பகுதியில் முறையான பாதுகாப்பின்றி, 67 கேன்களில் பஞ்சாமிர்தம் ஏற்றிய லாரி வந்தது. லாரியை சிறைபிடித்த ஹிந்து அமைப்பினர் பஞ்சாமிர்தம் கொண்டும் செல்லும் இடம் குறித்த ஆவணங்களை கேட்டனர். ஆவணங்கள் இல்லாத நிலையில் உரிய பாதுகாப்பின்றி பஞ்சாமிர்தம் ஏற்றிச் செல்வதால் லாரியை சிறை பிடித்தனர்.
பின் போலீசார் லாரியை போலீஸ் ஸ்டேஷன் எடுத்துச் சென்றனர். காலாவதி பஞ்சாமிர்தத்தை வேறு இடத்திற்கு கொண்டு சென்று அழிக்க முயற்சி நடக்கிறதா அல்லது பஞ்சாமிர்தத்தை கடத்திச் செல்கின்றனரா என பக்தர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கிடையில், கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:
தைப்பூச விழா முடிந்து விற்பனை செய்ய இயலாமல் தேக்கமடைந்த பஞ்சாமிர்தத்தை கழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் கோவில் வாகனத்தில் ஏற்றி கள்ளிமந்தயத்தில் உள்ள காலி இடத்தில் குழிதோண்டி மூட கொண்டு செல்லப்பட்டது.
லாரியை சிறைபிடித்த விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பா.ஜ.,வைச் சேர்ந்த 9 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க எஸ்.பி.,க்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டது.

