/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஜி.டி.என்., கல்லுாரியில் கருத்தரங்கு
/
ஜி.டி.என்., கல்லுாரியில் கருத்தரங்கு
ADDED : ஆக 23, 2025 05:24 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் ஜி.டி.என் கலைக்கல்லுாரியில் பொருளாதார துறை, வணிக மேலாண்மைத் துறை இணைந்து 'பசுமை பொருளாதாரம், 21ம் நூற்றாண்டுக்கான நிலைத்த தொழில் மாதிரிகள்' தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு நடத்தின. பொருளாதாரத் துறை தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.
கல்லுாரி முதல்வர் சரவணன் தலைமை வகித்தார். செயலாளர் ரத்தினம் பேசினார். கல்லுாரி இயக்குநர் துரை சான்றிதழ் வழங்கினார். நான்கு தொழில்நுட்ப அமர்வுகள் நடைபெற்ற நிலையில் முதல் அமர்வில் பேராசிரியர் சூரியகுமார், 2ம் அமர்வில் சீனா விரிவுரையாளர் ஜெயராஜ்,3ம் அமர்வில் காந்திகிராம பல்கலை பேராசிரியர் ராஜேந்திரன் ,4ம் அமர்வில் சிவகாசி உதவி பேராசிரியர் காலி ராஜன் தலைமையில் குழு விவாதம்,ஆய்வு கட்டுரை வாசிப்பு, வினாடி வினா போட்டி நடைபெற்றது.
வெற்றிபெற்ற 4 குழுக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்வி இயக்குநர் மார்க்கண்டேயன், மேலாண்மைத் துறைத் தலைவர் காவேரி, ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் அருண், சுஹாஷினி, முத்துகுமார், செல்வராணி, பங்கேற்றனர்.