ADDED : டிச 14, 2025 05:17 AM
அ நிறம் | அளவு
சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலையில் இந்திய அறிவியல் தொழில்நுட்ப சங்கம் சார்பில் 'பயன்பாட்டு அறிவியல் தொழில்நுட்பத்தின் தற்காலப் போக்குகள்' குறித்த கருத்தரங்கம் நடந்தது. துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார். பதிவாளர் சுந்தரமாரி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஹரி பொன்னம்மாள் வரவேற்றார்.
அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி, இந்திய அறிவியல் தொழில்நுட்ப சங்க தலைவர் ஜெயவேல், துணைத் தலைவர் முருகக்கூத்தன், செயலாளர் அறிவானந்தன், பேராசிரியர் ராமசாமி பேசினர்.
