UPDATED : அக் 15, 2026 07:51 PM
ADDED : அக் 15, 2026 07:48 PM
அ நிறம் | அளவு
ஆத்துார்: ஆத்துார் கூட்டுறவு கலை கல்லுாரியில் ‘தமிழ் மொழியல்ல, ஓர் இயக்கம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி முதல்வர் பாலகுருசாமி தலைமை வகித்து தமிழரின் பெருமை, தமிழ் இலக்கியங்களின் சிறப்பு, தமிழ் மொழியின் தொன்மை, இயக்கங்களின் வளர்ச்சி நிலை, தமிழ் பேரவையின் நோக்கம் குறித்து பேசினார்.
நிர்வாக அலுவலர் ராஜேஷ் கண்ணா முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் நாகஜோதி வரவேற்றார். டாக்டர் ஜோசப் சார்லி ஆதாஷ் உள்ளிட்டோர் பேசினர். உதவி பேராசிரியர் ரேவதி நன்றி கூறினார்.
