/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மருத்துவத்துறையில் அகத்தியர் பங்களிப்புகள் ஆச்சரியமூட்டும் மூத்த வழக்கறிஞர் சாமாபட் புகழாரம்

ADDED : டிச 24, 2024 05:09 AM
சின்னாளபட்டி: ''மருத்துவத்துறையில் அகத்தியர் பங்களிப்புகள் ஆச்சரியமூட்டுவதாக,'' கர்நாடக மாநிலம் மைசூர் மூத்த வழக்கறிஞர் சாமாபட் பேசினார்.
காந்திகிராம பல்கலையில் அகத்தியர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நடந்த தேசிய மாநாட்டு கருத்தரங்கில் அவர் பேசியதாவது: இந்திய அறிவு மரபின் தோற்றம் அகத்தியரிடம் இருந்து துவங்குகிறது. அவரது படைப்புகள், பங்களிப்புகள், மருத்துவ மரபுகள், இந்திய மொழிகளின் தோற்றத்திற்கும், தொன்மைக்கும், சிறப்புகளுக்கும் அடிப்படை காரணமாகின்றன. வடமொழிக்கும், தமிழுக்குமான இணைப்பு பாலமாக அவர் திகழ்கிறார். இரு மொழிகளும் உலகின் பழமையான மொழிக் குடும்பங்களாகும். இந்த தேசத்திற்கு அகத்தியர் முதுகெலும்பாக திகழ்கிறார். இந்திய மூலிகை மருத்துவ அறிவின் தோற்றமாகவும், அவரது மருத்துவ மூலிகைகள் நுால்கள் விளங்குகின்றன. மருத்துவத்துறையில் அவரது பங்களிப்புகள் ஆச்சரியமூட்டும். ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டு அவரைப் பற்றிய முழுமையான தகவல்கள் சேகரிக்க வேண்டும் என்றார்.
துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார். பொறுப்பு பதிவாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை துணைவேந்தர் கலா மாநாட்டை தொடக்கி வைத்தார். பேராசிரியர் ராமலிங்கம், பழநி ஐவர்மலை அனாதி நிறுவன நிறுவனர் ஆதிநாராயண சுவாமிகள், தமிழ்த்துறை தலைவர் ஆனந்தகுமார் பேசினார். தமிழ் புல முதன்மையர் முத்தையா வரவேற்றார். பள்ளி, கல்லுாரிகள், பல்கலைகள், சித்த மருத்துவ நிறுவனங்களை சேர்ந்த பலர் பங்கேற்றனர்.