ADDED : அக் 29, 2024 05:52 AM

ஒட்டன்சத்திரம்: தமிழகத்தில் 2500 ரேஷன் கடைகள் பிரிக்கப்பட்டு புதிய கடைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக,'' உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
கள்ளிமந்தையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் தீபாவளியை முன்னிட்டு முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் , ஆதரவற்ற விதவைகள் என 9826 பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டிகள் , சேலைகள் , இனிப்புகளை வழங்கிய அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: தமிழகத்தில் 42 மாதங்களில் 2500 ரேஷன் கடைகள் பிரிக்கப்பட்டு புதுக்கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம் சட்டசபை தொகுதியில் மட்டும் 125 ரேஷன் கடைகள் பிரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 17 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 896 ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. களிமந்தையத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளை விரைவில் வரவுள்ளது. தொப்பம்பட்டியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது. ஒட்டன்சத்திரத்திலும் விளையாட்டு மைதானம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் விரைவில் அமைக்கப்பட உள்ளது என்றார்.
கூட்டுறவுச் சங்க இணைப்பதிவாளர் காந்திநாதன், தாசில்தார் பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபு பாண்டியன், தாஹிரா, வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் ராஜாமணி, மாவட்ட ஊராட்சி துணை த்தலைவர் பொன்ராஜ், தொப்பம்பட்டி ஒன்றிய துணைத்தலைவர் தங்கம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் கலைக்கோவன், ஊராட்சித்தலைவர் கணேசன், ஒன்றிய செயலாளர் தங்கராஜ் கலந்து கொண்டனர்.

