/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' ஏரியில் கலக்கும் செப்டிக் டேங்க் கழிவு நீர்; நன்னீர் ஏரி மாசடையும் அவலம்

ADDED : டிச 19, 2025 07:05 AM

கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரியில் கழிவு விடப்படுவதால் மாசடைந்து வருகிறது. கொடைக்கானல் நகராட்சி அருகே நவீன கழிப்பறை நகராட்சியால் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு அருகே சில மீட்டர் துாரத்தில் செப்டிக் டேங்க் அமைக்கப்பட்ட நிலையில் சதுப்பு நிலம் என்பதால் ஊற்று ஏற்பட்டு செப்டிக் டேங்க் கழிவு நீர் ஏரியில் நேரடியாக கலக்குகிறது. பயோ செப்டிக் முறை அமைத்த போதும் முறையாக கையாளாத நிலை உள்ளது. ஏரி நீர் மாசடையாமல் இருக்க ஏரோட்டர், பயோபிளாக் கற்கள் அமைத்தும் பலனில்லை. ஏரியின் உபரி நீர் விவசாய பாசனம், பழநியின் குடிநீர் ஆதாரமாக உள்ளது.
தொடர்ந்து இது போன்ற சுகாதாரக்கேடு நகராட்சி அருகே நிகழ்வது பயணிகள் மத்தியில் முகம் சுளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நகராட்சி ஏரியில் விடப்படும் கழிவுநீரை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.