/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சர்வர்'பிஸி'யால் கட்டணம் செலுத்த வருவோர் அவதி
/
சர்வர்'பிஸி'யால் கட்டணம் செலுத்த வருவோர் அவதி
ADDED : பிப் 17, 2024 05:38 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் தினமும் சர்வர் 'பிஸி'ஏற்படுவதால் வீடு,சொத்து,குடிநீர் போன்றவற்றிற்கான கட்டணம் செலுத்த வருவோர் மணிக்கணக்கில் காத்திருந்து அவதிப்படுகின்றனர்.
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்திற்கு தினமும் ஏராளமானோர் வீடு,சொத்து,குடிநீர்,பாதாள சாக்கடை போன்றவைகளுக்கான கட்டணம் செலுத்துவதற்காக காலையிலேயே வந்து காத்திருக்கின்றனர். காலை 10:00 மணி முதல் பணம் செலுத்தும் ஆன்லைன் சர்வர்'பிஸி'யாக மாறுகிறது. இதனால் கட்டணங்களை செலுத்த முடியாமல் மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர். மாலை வரை பிஸியாக உள்ளதால் காத்திருக்கும் மக்கள் விரக்தியுடன் செல்கின்றனர். தொடரும் இப்பிரச்னையால் பலரும் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் கட்டணம் செலுத்த முடியாமல் அபராதத்துடன் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு ஒரு தீர்வு காண அரசு முன்வர வேண்டும்.