/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேவை குறைபாடு: நிவாரணம் வழங்க உத்தரவிட்ட நுகர்வோர் கோர்ட்
/
சேவை குறைபாடு: நிவாரணம் வழங்க உத்தரவிட்ட நுகர்வோர் கோர்ட்
சேவை குறைபாடு: நிவாரணம் வழங்க உத்தரவிட்ட நுகர்வோர் கோர்ட்
சேவை குறைபாடு: நிவாரணம் வழங்க உத்தரவிட்ட நுகர்வோர் கோர்ட்
ADDED : ஜூலை 02, 2025 07:56 AM
திண்டுக்கல், : குறிப்பிட்ட காலகெடு முடிந்து தாமதமாக சோபா டெலிவரி செய்த பர்னிச்சர் கடை நிர்வாகம், சேவை குறைபாட்டால் மன உளைச்சலுக்கு ஆளான வாடிக்கையாளருக்கு ரூ.13 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும் என திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் தீர்ப்பளித்தது.
திண்டுக்கல், சிறுமலை பிரிவு அருகே உள்ள வாசிமலை நகரை சேர்ந்தவர் ஜெரால்டு மெஜாலா ஜெயந்த் 47. இவர் திண்டுக்கல் சாலை ரோட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் காசாளராக உள்ளார். இவர், திண்டுக்கல்-தாடிக்கொம்பு சாலையில் உள்ள தனியார் பர்னிச்சர் கடையில் மார்ச் 9ம் தேதி செட் ஆர்டர் செய்து, பர்னிச்சருக்கான முழுத்தொகை ரூ.26 ஆயிரத்து 700 ஐ அவர் செலுத்தியுள்ளார். ஆனால் ஒரு மாதம் ஆகியும், கடை ஊழியர்கள் சோபா டெலிவரி செய்யவில்லை. இதுகுறித்து ஏப்., 15ம் தேதி பர்னிச்சர் கடைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அதைத்தொடர்ந்து, அன்று இரவே சோபாவை டெலிவரி செய்துள்ளனர். இருப்பினும் சேவைகுறைபாடு, வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நிவாரணம் பெற்று தருமாறு மே 23ம் தேதி திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இதில் வக்கீல் ஆல்வின் அமல பிரசன்னா ஆஜரானார். வழக்கில், காலக்கெடு முடிந்த பிறகு சோபா டெலிவரி செய்யப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சல், சேவை குறைபாடுக்கு ரூ10 ஆயிரம், வழக்குச் செலவு ரூ.3 ஆயிரம் சேர்த்து ரூ.13 ஆயிரத்தை பர்னிச்சர் கடை நிறுவனம் மனுதாரருக்கு நிவாரணமாக வழங்கவேண்டும் என நுகர்வோர் நீதிமன்ற தலைவர் சித்ரா, உறுப்பினர் பாக்கியலட்சுமி தீர்ப்பளித்தனர்.