/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கண்டக்டர், பயணிகளை தாக்கி பணம் பறித்த ஏழு பேர் கைது
/
கண்டக்டர், பயணிகளை தாக்கி பணம் பறித்த ஏழு பேர் கைது
கண்டக்டர், பயணிகளை தாக்கி பணம் பறித்த ஏழு பேர் கைது
கண்டக்டர், பயணிகளை தாக்கி பணம் பறித்த ஏழு பேர் கைது
ADDED : அக் 15, 2025 12:52 AM
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் மினிபஸ்சுக்குள் ஏறி ஆயுதங்களை காட்டி மிரட்டி கண்டக்டர், பயணிகளிடம் இருந்து பணம், அலைபேசிகளை பறித்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நல்லாம்பட்டி வழியாக சூசையாபுரத்திற்கு தனியார் மினி பஸ் சென்றது. இதனை வாழைக்காய் பட்டியை சேர்ந்த டிரைவர் ஆசைத்தம்பி 36 ,ஓட்டினார். திண்டுக்கல் பெரியக்கோட்டையை சேர்ந்த அய்யர் 45, கண்டக்டராக இருந்தார். தண்டல்காரன்பட்டி அருகே சென்றபோது வழிமறித்த கும்பல் அரிவாள், கத்தியுடன் உள்ளே நுழைந்து பஸ்சின் கண்ணாடியை உடைத்தது.
கண்டக்டரை தாக்கி பயணிகளிடம் வசூல் செய்த டிக்கெட் கட்டணம் ரூ.15 ஆயிரம், அவரின் அலைபேசி, பயணி சேசுராஜ் அலைபேசியை பறித்தது. அப்போது தண்டல்காரன்பட்டியை சேர்ந்த வெள்ளிமலை 45, அய்யனார் 20, கும்பலை பிடிக்க முயன்றனர்.
சுதாரித்த கும்பல் இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. காயமடைந்த இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திண்டுக்கல் தாலுகா இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ., கிருஷ்ணவேணி விசாரணையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக திண்டுக்கல் நல்லாம்பட்டியை சேர்ந்த யுவராஜ் 31, ராசு 24, பிரவீன்குமார் 21, தினேஷ்குமார் 21, லோகநாதன் 21, ஜோதீஸ்வரன் 22, சுரேஷ் 25, ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான தாமோதரனை 28, தேடி வருகின்றனர்.