/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காதல் கொலையில் பெண் சகோதரர் மிரட்டல் 'வாய்ஸ் மெசேஜ்' வைரல்
/
காதல் கொலையில் பெண் சகோதரர் மிரட்டல் 'வாய்ஸ் மெசேஜ்' வைரல்
காதல் கொலையில் பெண் சகோதரர் மிரட்டல் 'வாய்ஸ் மெசேஜ்' வைரல்
காதல் கொலையில் பெண் சகோதரர் மிரட்டல் 'வாய்ஸ் மெசேஜ்' வைரல்
ADDED : அக் 15, 2025 12:53 AM
வத்தலக்குண்டு : நிலக்கோட்டை அருகே மாற்று சமுதாய பெண்ணை காதலித்து திருமணம் செய்த ராமச்சந்திரனை கொலை செய்வதற்கு முன்பு பெண்ணின் சகோதரர் அனுப்பிய மிரட்டல் ஆடியோ வெளியாகி உள்ளது.
ராமநாயக்கன்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரனுக்கும்24, கணபதிபட்டியை சேர்ந்த சந்திரன் மகள் ஆர்த்தி 22,க்கும் காதல் ஏற்பட கடும் எதிர்ப்புகளை மீறி ஜூனில் இருவரும் திருமணம் செய்தனர். அக்.12ல் குளிப்பட்டி சென்ற ராமச்சந்திரனை சந்திரன் 50, வெட்டி கொலை செய்தார்.
பல்வேறு போராட்டத்துக்கு பின ராமச்சந்திரனின் உடலை உறவினர்கள் பெற்று அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்தனர்.
இந்நிலையில் கொலை செய்வதற்கு முன்பு ராமச்சந்திரனுக்கு ஆர்த்தியின் சகோதரர் ரவீன் கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியாகி உள்ளது. அதில், வரப்போகின்ற ஒரு ஆண்டு காலம் உனக்கு நரகமாகத்தான் இருக்கப் போகிறது.
வீட்டில் ஒருவர் கூட நிம்மதியாக இருக்க முடியாது அனைவரையும் கொன்று விடுவோம் என மிரட்டியப்படி பேசி உள்ளார். இதனை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.