sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கால்பந்து லீக் போட்டி செவன் டாலர்ஸ் அணி வெற்றி

/

கால்பந்து லீக் போட்டி செவன் டாலர்ஸ் அணி வெற்றி

கால்பந்து லீக் போட்டி செவன் டாலர்ஸ் அணி வெற்றி

கால்பந்து லீக் போட்டி செவன் டாலர்ஸ் அணி வெற்றி


ADDED : அக் 31, 2024 02:50 AM

Google News

ADDED : அக் 31, 2024 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் 2024--25 ஆம் ஆண்டிற்கான கால்பந்து தொடர் லீக் போட்டிகள் நடந்து வருகின்றன.எஸ்.எஸ்.பி., பள்ளி மைதானத்தில் நடந்த போட்டியில் செயின்ட் மைக்கேல், செயின்ட் ஜோசப் அணிகள் மோதின. இதில் செயின்ட் மைக்கேல் அணி 4:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ரென்சிங் 3, ரெஜிஸ் 1 என கோல் அடித்தனர். செவன் டாலர்ஸ்,ராயல் கால்பந்து அணிக்குமிடையேயான போட்டியில் 1:0 என்ற கோல் கணக்கில் செவன் டாலர்ஸ் அணி வெற்றி பெற்றது. அபி கோல் அடித்தார்.

சன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு எதிரான போட்டியில் என்.கே.ஏ.பி., கால்பந்து அணி 1:0 என்ற கோல் கணக்கில் வென்றது.

கோபி கோல் அடித்தார். ரேடியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4:2 என்ற கோல் கணக்கில் செயின்ட் மேரிஸ் அணி வென்றது.

டேமியன் 2, பரண பாஸ், வில்லியம் ஆகியோர் 1 கோல் அடித்தனர். ரேடியன்ஸ் அணியில் கிறிஸ்டோபர் கோல் அடித்தார். ஜி.எஸ்., ஸ்போர்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பீலே ஸ்போர்ட்ஸ் அணி 3:0 என்ற கோல் கணக்கில் வென்றது. ஜோஸ்வா, சோகன் கோல் அடித்தனர். ஸ்டாலியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் என்.பி.ஆர்.ஜி.ஐ., அணி 5:0 என்ற கோல் கணக்கில் வென்றது. சிந்து 2, யயாதி, கலை, ஜாசிம் ஆகியோர் தலா 1 என கோல் அடித்தனர். சீட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் எஸ்.எஸ்.எம்., அணி 6:1 என்ற கோல் கணக்கில் வென்றது. நிரஞ்சன் 3, கோகுல் 2, எட்வின் ஜோயல் 1 என கோல் அடித்தனர். சீட்ஸ் அணியில் சரத் கோல் அடித்தார்.






      Dinamalar
      Follow us