/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பள்ளத்தில் வேன் கவிழ்ந்து ஏழு பேர் காயம்
/
பள்ளத்தில் வேன் கவிழ்ந்து ஏழு பேர் காயம்
ADDED : அக் 25, 2024 02:45 AM

வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே ரோட்டோர பள்ளத்தில் நுாற்பாலை வேன் கவிழ்ந்ததில் 7 பேர் காயமடைந்தனர்.
வடமதுரை அருகே செங்குறிச்சி, கம்பிளியம்பட்டி சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்களை அடுத்தடுத்த ஊர்களில் ஏற்றி கொண்டு நுாற்பாலை வேன் நேற்று காலை வேடசந்துாருக்கு சென்று கொண்டிருந்தது. கூத்தம்பட்டி பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் ரோட்டோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதில் கம்பிளியம்பட்டி சரோஜா 35, மார்க்கம்பட்டி பாண்டீஸ்வரி 40, சரஸ்வதி 42, ஜனனி 19, ஜெகதீஸ்வரி 40, நிலப்பட்டி வள்ளி 40, டிரைவர் பாண்டியனுார் முத்துப்பாண்டி 23 , காயமடைந்தனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.