ADDED : பிப் 26, 2026 06:26 AM
அ நிறம் | அளவு
வேடசந்துார்: நாகம்பட்டி அய்யனார் நகரில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டும் கழிவுநீர் வெளியேற வழி இன்றி தேங்கி நிற்கிறது. இதனால் கொசு தொல்லையால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
பி.டி.ஒ., உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் ஒட்டன்சத்திரம் ரோட்டில் ரோடு மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கை விரைவில் தீர்க்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
