sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 காத்திருப்பு போராட்டம் துறை பணிகள் பாதிப்பு

/

 காத்திருப்பு போராட்டம் துறை பணிகள் பாதிப்பு

 காத்திருப்பு போராட்டம் துறை பணிகள் பாதிப்பு

 காத்திருப்பு போராட்டம் துறை பணிகள் பாதிப்பு


ADDED : பிப் 26, 2026 06:26 AM

Google News

ADDED : பிப் 26, 2026 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்று முதல் காத்திருப்புப் போராட்டத்தை துவக்கி உள்ளதால் ஆன்லைன், நில அளவை, தாசில்தார் அலுவலகங்களில் பொது மக்கள் பணிகள் முடங்கின.

வருவாய், நிலஅளவை துறைகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் 10 சதவீத பங்களிப்பை ரத்து செய்ய வேண்டும் என்பன உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.

நேற்று முன்தினம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கிய நிலையில் நேற்று காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ஜான் பாஸ்டின் தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ராஜரத்தினம், பொருளாளர் நாகலட்சுமி முன்னிலை வகித்தனர்.

கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணா குபேரன் பேசினார்.

நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் கோட்டத் தலைவர் கண்ணன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக்அலி, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் சுகந்தி, மாவட்ட துணைத் தலைவர் மகாராஜன் முன்னாள் மாநில துணைத் தலைவர் மங்களப்பாண்டியன் பேசினர்.






      Dinamalar
      Follow us