/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கழிவுநீர் கலந்து வீணாகும் குளங்கள்; அவசியமாகிறது துறை ரீதியான நடவடிக்கை
/
கழிவுநீர் கலந்து வீணாகும் குளங்கள்; அவசியமாகிறது துறை ரீதியான நடவடிக்கை
கழிவுநீர் கலந்து வீணாகும் குளங்கள்; அவசியமாகிறது துறை ரீதியான நடவடிக்கை
கழிவுநீர் கலந்து வீணாகும் குளங்கள்; அவசியமாகிறது துறை ரீதியான நடவடிக்கை
ADDED : செப் 02, 2024 12:44 AM

மாவட்டத்தில் நுாற்றுக்கணக்கான நீர்நிலைகள், பரப்பளவு, பயன்பாட்டு வகை அடிப்படையில் குளம், குட்டை, ஊருணி என வகைப்படுத்தப்பட்டு உள்ளன. நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தல் மட்டுமின்றி அடிப்படை குடிநீர் ஆதாரமாகவும் இவற்றில் பெரும்பான்மையானவை அமைந்துள்ளது. ஆத்துார் 118, பழநி 45, ஒட்டன்சத்திரம் 96, நத்தம் 568, தொப்பம்பட்டி 221, வேடசந்துார் 119, வத்தலகுண்டு 85, குஜிலியம்பாறை 221, சாணார்பட்டி 508, நிலக்கோட்டை 181, வடமதுரை 127, ரெட்டியார்சத்திரம் 119, திண்டுக்கல் 131 என, 2,539 நீர் நிலைகள் மாவட்ட நிர்வாக பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதுதவிர 100 ஏக்கருக்கும் கூடுதலான பரப்புள்ள 107 கண்மாய்கள் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ளது.
இருப்பினும் பெரும்பாலானவற்றின் நீர்பிடிப்பு வழித்தடம் வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு,பராமரிப்பின்மை துார்ந்து போயுள்ளன. இவற்றை பராமரிக்கும் அரசுத்துறை அமைப்புகளின் அலட்சியத்தால் மழை நீர் சம்பந்தப்பட்ட நீராதாரங்களை வந்தடைவதில் சிக்கல் நீடிக்கிறது.
அதேவேளையில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் குடியிருப்பு தொழிற்சாலை, வணிக நிறுவனங்களிலிருந்து கழிவுநீர் நீர்நிலைகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் அனுப்பப்படுகிறது. இதனால் பெரும்பாலான குடிநீர் ஆதாரங்கள் கழிவுநீர் மட்டுமே தேங்கும் கிடங்குகளாக மாறியுள்ளது. இவை நிலத்தடி நீர் ஆதாரத்தை பாதிப்பது மட்டுமின்றி தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. புதிதாக நீராதாரங்களை உருவாக்க முடியாத நிதிப்பற்றாக்குறை சுமை நிறைந்த சூழலில் முன்னோர் உருவாக்கிய நீர்நிலைகளை பராமரிக்க வேண்டியது அவசிய தேவையாக உள்ளது.
மாவட்ட நிர்வாகம் குளம், குட்டைகளில் கழிவுநீர் சேகரமாவதை தடுத்து நீராதார மேம்பாட்டு நடவடிக்கைகளை துரிதப்படுத்த முன்வர வேண்டும்.