/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாக்கடை தடுப்பால் கொசுக்கள் உற்பத்தி 'ஜோர்'
/
சாக்கடை தடுப்பால் கொசுக்கள் உற்பத்தி 'ஜோர்'
ADDED : ஜன 24, 2025 05:34 AM

பாதையில் பட்டுப்போன மரம்
திண்டுக்கல் ஒடுக்கம் ரோடு அரசு மருத்துவ கல்லுாரி செல்லும் பாதையில் பட்டுப்போன மரத்தால் விபத்து அபாயம் உள்ளது. போக்குவரத்து அதிகம் உள்ள இப்பகுதியில் மரம் உள்ளதால் இவ்வழியில் செல்வோர் ஒரு வித அச்சத்துடன் செல்கின்றனர். ராஜேஷ் குமார், திண்டுக்கல்..............----------அழிந்துள்ள பெயர் பலகை
திண்டுக்கல் முகமதியாபுரத்தில் பெயர் பலகை அழிந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அழிந்துள்ள பலகையால் தெரு பெயர் தெரியாமல் சுற்றி செல்கின்றனர். பெயர் பலகையை புதுபிக்க வேண்டும். யூசுப்கான், திண்டுக்கல்................----------
சேதமான மின் கம்பம்
அம்மைய நாயக்கனுார் பேரூராட்சி பொம்மணம்பட்டியில் மெயின் தெருவில்  உள்ள மின் கம்பத்தின் அடியில் சிமென்ட் பூச்சுக்கள் பெய்ந்து கம்பிகள் தெரிகிறது .இதனால் பொதுமக்களும் வாகன ஒட்டிகளும் அச்சப்படுகின்றனர்  க.ரதிஷ்பாண்டியன் , பொம்மணம்பட்டி.
........---------
எரியாத விளக்குகள்
புதுச்சத்திரம் ஊராட்சி கம்பளிநாயக்கன்பட்டி சாலையில் ரயில்வே கேட் வடக்கு பகுதியில் உள்ள மின் விளக்குகள் இரவு நேரங்களில் பல மாதங்களாக எரிவதில்லை .இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.  கி.ரங்கசாமி கம்பளிநாயக்கன்பட்டி.
......................
சேதமடைந்த ரோடு
ஒட்டன்சத்திரம் பழநிரோட்டில் கே.ஆர். அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ரோட்டின் ஓரங்கள் சேதமடைந்துள்ளதால் வாகனங்களை இயக்க சிரமமாக உள்ளது. எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடும் நிலையில் விபத்துக்குள்ளாகின்றனர்.-துரைச்சாமி ஒட்டன்சத்திரம்.
................
சாக்கடையில் தடுப்பு
சேவுகம்பட்டி பேரூராட்சி  பட்டிவீரன் பட்டி சாலை குடியிருப்பு பகுதி சாக்கடையில்  கழிவு நீர் செல்ல முடியாமல் தடுப்பு உள்ளது . கொசுக்கள் ஊற்பத்தியாகும் இடமாகவும்  உள்ளதால் இதன் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும். கருப்புசாமி,வத்தலக்குண்டு.
................----------தங்கும் விடுதி அருகே குப்பை
கோபால்பட்டி அருகே வேம்பார்பட்டியில் அரசு மாணவர்கள் தங்கும் விடுதி அருகே குப்பை, கழிவுகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.   முகமது ரபிக், வேம்பார்பட்டி.
.............----------

