/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாக்கடை அடைப்பால் கழிவு நீர் தேங்கி தொற்று
/
சாக்கடை அடைப்பால் கழிவு நீர் தேங்கி தொற்று
ADDED : டிச 13, 2024 04:56 AM

டூவீலர்களால் நெரிசல் : திண்டுக்கல் ஏ.எம்.சி. ரோட்டில் டூவீலர்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி மாணவர்கள் வாகனங்கள் அதிகமாக செல்லும் பாதை என்பதால் வாகனங்களை முறையாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--முனியப்பன், திண்டுக்கல்.
----------நிழற்குடை இருக்கைகள் மாயம் : எரியோடு சோனமுத்தா நாயக்கனுார் பிரிவில் அமைந்திருக்கும் பயணியர் நிழற்கூடத்தில் இருக்கைகளுக்காக அமைக்கப்பட்டிருந்த பலகைகள் இல்லாததால், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும். -
-ராஜாமணி, எரியோடு.
ஜல்லி கற்கள் பெயர்ந்த ரோடு : சாணார்பட்டி அருகே வீரசின்னம்பட்டியில் சாலை அமைக்கப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து உள்ளது. இதில் பயணிக்கும் கிராம மக்கள் இன்னல்களை சந்திக்கின்றனர். சாலையை சீரமைக்க வேண்டும்.
-விஜயன், சாணார்பட்டி.
பழுதான போர்வெல் : பழநி நகராட்சி 28 வது வார்டில் போர்வெல் பழுதாகி உள்ளது .பல நாட்கள் ஆகியும் சரி செய்யப்படாதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர் .பலமுறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை .போர்வெல்லை சரி செய்ய வேண்டும்.
-சீனிவாசன், பழநி.
ரோட்டில் கொட்டப்படும் குப்பை : சீலப்பாடி ஊராட்சி மகாலட்சுமி நகரில் ரோட்டில் குப்பை கொட்டி பல நாட்களாக அள்ளாமல் குவிந்துள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. நோய் தொற்று அபாயம் உள்ளதால் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்மணி, திண்டுக்கல்.
சாக்கடையில் அடைப்பு : திண்டுக்கல் பி.டபிள்யு.டி. காலனியில் சாக்கடை அடைக்கப்பட்டுள்ளது .பல நாட்காக இப்படியே உள்ளதால் கழிவு நீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. சாக்கடை அடைக்கப்பட்டதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அல்போன்ஸ், திண்டுக்கல்.
மின்மாற்றியில் படரும் செடி : ஒட்டன்சத்திரம் விருப்பாச்சி இடையே ரோட்டின் அருகே உள்ள மின்மாற்றியில் செடிகள் படர்ந்து உள்ளது. இதன் மூலம் மின்விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை அகற்ற நடவடிக்கை மின் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--வேல்முருகன், ஒட்டன்சத்திரம்.

