ADDED : ஜன 15, 2024 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி : சாணார்பட்டி அருகே அஞ்சுகுழிப்பட்டி சோழகுளத்துப்பட்டியில் வெட்ஸ் நிறுவனத்தின் சார்பில் இளம் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி மையம் தொடங்கி வைக்கப்பட்டது.
இதை அஞ்சுகுழிப்பட்டி ஊராட்சி தலைவர் தேவிராஜாசீனிவாசன் தொடங்கி வைத்தனர்.வெட்ஸ் சமூக சேவை நிறுவன தலைவர் ஆக்னிஸ் ஜெபவதி, தையல் ஆசிரியர் பத்மினி பேசினார்.
நிறுவனர் கிருஷ்ணசாமி, இயக்குனர் பாபுராஜ் முன்னிலை வகித்தனர். தையல் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சங்கிலி பிரபு வரவேற்றார்.சமுக ஆர்வலர் ஆண்டிச்சாமி, ஆறுமுகம் கலந்து கொண்டனர். பொருளாளர் சிபா ராணி நன்றிகூறினார்.