/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு சிறை,டிரைவருக்கு பிடிவாரன்ட்
/
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு சிறை,டிரைவருக்கு பிடிவாரன்ட்
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு சிறை,டிரைவருக்கு பிடிவாரன்ட்
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு சிறை,டிரைவருக்கு பிடிவாரன்ட்
ADDED : மே 29, 2024 06:05 PM

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் பழநி ஆயக்குடியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பஸ் டிரைவருக்கு 5 ஆண்டு சிறை
தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வேறொரு வழக்கில்
சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பழநி ஆயக்குடியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் நாராயணன்58. இவர் 2023ல் அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல்
தொல்லை கொடுத்தார். சிறுமி இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் பழநி அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர்.
போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நாராயணனை.கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் வழக்கு திண்டுக்கல்
சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சரண்,குற்றவாளி நாராயணனுக்கு 5 ஆண்டுகள் சிறை
தண்டனை,ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். விசாரணையில் நாராயணன்,ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரன்ட் உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது. இதேபோல் பழநி ஆவனி மூலவீதியை சேர்ந்த தனியார் ஊழியர் சஞ்சய்20. இவர் 2021ல் அதே பகுதியை சேர்ந்த 16
வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டார்.
இதையறிந்த அவரது பெற்றோர் பழநி அனைத்து மகளிர் போலீசில் புகாரளிக்க அவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து
சஞ்சயை,கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. இவ்வழக்கை
விசாரித்த நீதிபதி சரண்,குற்றவாளி சஞ்சய்க்கு,25 ஆண்டுகள் சிறை தண்டனை,ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.