/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சக்தி ஜெனன காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
/
சக்தி ஜெனன காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : செப் 08, 2025 06:26 AM

கள்ளிமந்தையம் : கொத்தையம் கொண்டமநாயக்கன்வலசு செல்வ விநாயகர் சக்தி ஜெனன காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
நேற்று முன் தினம் விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது. அன்று மாலை கொண்டமநாயக்கன் வலசு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ ஏழுமலையான் சுவாமி ஆலயத்தில் இருந்து தீர்த்தம் மற்றும் முளைப்பாரி அழைத்து வரப்பட்டது.
கும்பாலங்காரம், யாக சாலை பிரவேசம், முதற்கால பூஜை எந்திர ஸ்தாபிதம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடு மந்திர சக்தி கலசங்கள் ஆலயம் வலம் வருதல் நடந்தது. சிவாச்சாரியார்களால் கோயில் கலசங்களுக்கு புண்ணிய தீர்த்தங்களை செலுத்தி கும்பாபிஷேகம் நடந்தது.
அன்னதானம் நடந்தது. அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார். ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.