ADDED : ஜூலை 06, 2026 12:06 AM

அ நிறம் | அளவு
நத்தம்: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேய்பிறை சஷ்டி பூஜை விழா நடந்தது.
இதை முன்னிட்டு முருக பெருமானுக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தன.
அருகிலுள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதை போலவே நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தண்டபாணி சன்னதியிலும் சஷ்டி பூஜை நடந்தது.
