ADDED : ஆக 23, 2026 06:13 PM
பழநி: பழநி சிவசேனா சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
பழநியில் சிவசேனா சார்பில் மாநில பொதுச் செயலாளர் கனிவளவன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் தேசிய ஒருங்கிணைப்பாளர் ராஜ்சிங்சந்தேல், மாநிலச் செயலாளர்கள் அமுதரசன், ரமேஷ் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் மும்பை, புனே நகரங்களில் கொண்டாடுவது போல விநாயகர் சதுர்த்தி விழாவை கட்டுப்பாடுகள் இன்றி மக்கள் சுதந்திரமாக கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் விதிக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடக்க வேண்டும். வழிபாட்டுக்கும் விழாக்களுக்கும் தடையாக அவர்கள் இருக்கக் கூடாது. வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
