/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டிரான்ஸ்பார்மர் அருகில் கடை மின்வாரியம் நோட்டீஸ்
/
டிரான்ஸ்பார்மர் அருகில் கடை மின்வாரியம் நோட்டீஸ்
ADDED : நவ 13, 2024 04:32 AM
வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு பகுதியில் டிரான்ஸ்பார்மர் அருகில் வணிக நிறுவனங்கள் வைத்து இருப்பவர்களுக்கு மின்வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழக அரசு அனைத்து துறையினருக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தி உள்ளது.
அதன் அடிப்படையில் வத்தலக்குண்டு மின்வாரியம் டிரான்ஸ்பார்மர் அருகில் கடை வைத்திருப்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில் , மின்பாதையின் அருகில், கீழ் பகுதியில் மின் விபத்து , பொருட்சேதம் ஏற்படுமாயின் தாங்களே முழு பொறுப்பு ஏற்க வேண்டும். தமிழ்நாடு மின்வாரியம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. மின்பாதையின் உபயோகத்தினை வேறு பாதுகாப்பான இடத்தில் மாற்றம் செய்ய வேண்டுமெனில் உரிய விண்ணப்பத்தை கணினி வழியாக பதிவு செய்து தொடர் நடவடிக்கைக்கு பின் பாதுகாப்பாக மின்பாதை மாறுதல் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

