ADDED : செப் 23, 2026 08:21 PM
அ நிறம் | அளவு
கொடைக்கானல், செப்.24-
கொடைக்கானல் கலையரங்கத்தில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு செய்தனர்.
கொடைக்கானல் நகரில் நீடிக்கும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏரிச்சாலை கலையரங்கத்தில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்க கடந்த அரசு திட்டம் தயார் செய்தது. தொடர்ந்து நகராட்சி இதற்கான பணிகளில் ஈடுபட்டது.
இந்நிலையில் இப்பகுதியில் கடை வைத்துள்ள வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு செய்தனர்.
