ADDED : செப் 23, 2026 08:14 PM
அ நிறம் | அளவு
தாண்டிக்குடி, செப்.24-
கொடலங்காட்டை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி நிவேதா. தற்போது பட்டிவீரன்பட்டியில் வசிக்கின்றனர். கொடலங்காட்டில் நடந்த இறப்பை விசாரித்து டூவீலரில் தம்பதி பட்டிவீரன்பட்டி திரும்பினர். சித்தரேவு மலை ரோடு கோழிஊத்தில் நின்றனர். காரில் வந்த கொங்கபட்டி சவுந்திரபாண்டி 36, அருண்குமார் 24, தம்பதியிடம் பேசுவது போல் நடித்து நிவேதா கழுத்தில் இருந்த நகை, அலைபேசியை பறிக்க முயன்றனர். கூச்சலிடவே தப்பினர். கார்த்திகேயன் புகாரின் பேரில் தாண்டிக்குடி போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
