/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தட்டுப்பாடு ரூ. 20, 50, 100 மதிப்பிலான பத்திரங்கள் கூடுதல் செலவால் பொதுமக்கள் சிரமம்
/
தட்டுப்பாடு ரூ. 20, 50, 100 மதிப்பிலான பத்திரங்கள் கூடுதல் செலவால் பொதுமக்கள் சிரமம்
தட்டுப்பாடு ரூ. 20, 50, 100 மதிப்பிலான பத்திரங்கள் கூடுதல் செலவால் பொதுமக்கள் சிரமம்
தட்டுப்பாடு ரூ. 20, 50, 100 மதிப்பிலான பத்திரங்கள் கூடுதல் செலவால் பொதுமக்கள் சிரமம்
ADDED : ஜன 19, 2024 05:28 AM

வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ரூ. 20,50, 100 மதிப்பிலான பத்திரங்கள் தட்டுப்பாடு நிலவுவதால் பத்திரப் பதிவில் சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், கூடுதல் செலவால் பொதுமக்கள் பாதிக்கின்றனர்.
ரியல் எஸ்டேட் துறை நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது. பொது மக்களும் தங்கத்திற்கு அடுத்தபடியாக நிலத்தில் முதலீடு செய்வதை பெரிதும் விரும்புவதால் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறது. அரசும் அதற்கேற்றவாறு நல்ல முகூர்த்த நாட்களில் விடுமுறையாக இருந்தாலும் சிறப்பு கவனம் செலுத்தி சிறப்பு வேலை நாளாக அறிவித்து பத்திரப்பதிவிற்கு முனைப்பு காட்டி வருகிறது. இதனால் ஆண்டுதோறும் பத்திரப்பதிவு மூலம் அரசுக்கு கூடுதலாக வருமானம் கிடைத்து வருகிறது. அதே நேரத்தில் பத்திரப் பதிவுக்கு தேவையான ரூ. 20, 50, 100 மதிப்பிலான பத்திரங்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. இரண்டு மாதங்களாக இதே நிலை நீடிப்பதால் பத்திரப் பதிவில் சிக்கல்கள் எழுந்துள்ளன.
வாடகை ஒப்பந்தம், ஒத்தி, குத்தகை போன்றவற்றை எழுதுவதற்கு சிறிய மதிப்பிலான பத்திரங்களே தேவைப்படும் என்பதால் இரண்டு மாதங்களாக அவை கிடைக்காமல் ரூ. 200க்கு மேற்பட்ட பத்திரத்தை வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் கூடுதல் செலவும் ஏற்படுகிறது.இதன் பற்றாக்குறையை தவிர்க்க நடவடிக்கை அவசியமாகிறது .
..............
அதிகமாக தேவை
கிராமங்களில் நிலம் ஒத்தி, குத்தகை ஆகியவை அதிகம் பயன்பாட்டில் உள்ளன. இதனால் குறைந்த மதிப்பிலான பத்திரம் அதிகமாக தேவைப்படுகிறது. ரூ.100க்கு குறைவான விலையில் உள்ள பத்திரம் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பத்திரப்பதிவு துறையில் உள்ள சிரமங்களை தவிர்க்க சிறிய மதிப்பிலான பத்திரங்கள் தாராளமாக கிடைப்பதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும்.
ராஜா, விவசாயி, விராலிப்பட்டி.
..........

