sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 எஸ்.ஐ., தேர்வு: 1528 பேர் ஆப்சென்ட்

/

 எஸ்.ஐ., தேர்வு: 1528 பேர் ஆப்சென்ட்

 எஸ்.ஐ., தேர்வு: 1528 பேர் ஆப்சென்ட்

 எஸ்.ஐ., தேர்வு: 1528 பேர் ஆப்சென்ட்


ADDED : டிச 22, 2025 05:42 AM

Google News

ADDED : டிச 22, 2025 05:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் எஸ்.ஐ., பணியிடத்துக்கான தேர்வு நடந்தது. இதில் ஆயிரத்து 528 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

தமிழக காவல் துறையில் எஸ்.ஐ., பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத்தேர்வு தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் நேற்று நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 11 ஆண்கள், ஆயிரத்து 157 பெண்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 168 பேர் எஸ்.ஐ. தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதற்காக 3 கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. ஆயிரத்து 157 பெண்கள் உள்பட ஆயிரத்து 360 பேர் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

காலை 8:30 மணி முதல் தேர்வு மையத்துக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். மொத்தம் 2 தாள்களாக தேர்வு நடந்தது. முதல் தாள் காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும், 2ம் தாள் மதியம் 2:30 மணி முதல் மாலை 5:00 மணி வரையும் நடந்தது.

தேர்வை 3 ஆயிரத்து 640 பேர் எழுதினர். ஆயிரத்து 528 பேர் ஆப்சென்ட் ஆகினர். முறைகேடுகளை தடுக்க 20 தேர்வர்களுக்கு ஒரு மேற்பார்வையாளர்கள், பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டிருந்தன. தேர்வு மையங்களை எஸ்.பி.,பிரதீப் ஆய்வு செய்தார்.






      Dinamalar
      Follow us