/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சித்த மருத்துவ பிரிவு மருத்துவக்கழிவுகள் அகற்றம்
/
சித்த மருத்துவ பிரிவு மருத்துவக்கழிவுகள் அகற்றம்
ADDED : பிப் 20, 2025 05:50 AM

திண்டுக்கல்: தினமலர் செய்தி எதிரொலியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனை சித்த பிரிவு அருகே கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகள் அகற்றப்பட்டது.
திண்டுக்கல் திருச்சி ரோட்டில் அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவமனை உள்ளது. இங்கு சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி,யோகா, இயற்கை மருத்துவம் என 5 பிரிவுகள் செயல்படுகிறது. தினமும் 500க்கு மேலானவர்கள் சிகிச்சை பெற வருகின்றனர். சித்த மருத்துவமனை பின்புறம் அரசு மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் மருத்துவக்கழிவுகளை மூடைகளில் கொண்டு வந்து கொட்டி தீயிட்டு எரிக்கின்றனர். இதிலிருந்து வெளிவரும் புகையால் நோயாளிகளுக்கு மூச்சித்திணறல் ஏற்படுகிறது. இது தொடர்பாக நேற்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனை டீன் சுகந்திராஜகுமாரி உத்தரவில் மருத்துவமனை பணியாளர்கள் சித்த மருத்துவ பிரிவு அருகே கொட்டப்பட்டிருந்த கழிவுகளை அகற்றி அப்பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தனர்.