/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு பஸ் இயக்க கையெழுத்து இயக்கம்
/
அரசு பஸ் இயக்க கையெழுத்து இயக்கம்
ADDED : டிச 16, 2024 05:00 AM
நத்தம் : நத்தம் செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மூங்கில்பட்டிக்கு மேலுாரில் உள்ள அரசு கலைக்கல்லுாரியில் ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர்.
கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள் நத்தத்திலிருந்து கொட்டாம்பட்டி சென்று மேலுாருக்கு செல்ல வேண்டியுள்ளது. மாணவர்களின் நலன் கருதி அரசு பஸ் இயக்க கோரி மூங்கில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் குழந்தைவேல் தலைமை வகித்தார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராணி, கிளை செயலாளர் பவுன்ராஜ் முன்னிலை வகித்தனர்.
மூங்கில்பட்டி கிராம மக்கள், மாணவர்கள் பங்கேற்று தங்கள் ஊரின் வழியாக மேலுாருக்கு அரசு டவுன் பஸ் இயக்க கோரி கையெழுத்திட்டனர்.
கட்டுமான சங்க நிர்வாகிகள் பழனிசாமி, ராமன், செல்வம், அன்னராஜ் பங்கேற்றனர்.

