ADDED : ஜன 21, 2025 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை 140 ஐ திரும்ப பெற வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தை சென்னை உயர் நீதிமன்ற ஆணைபடி பணிக்காலமாக முறைப்படுத்தி உத்தரவு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் கையெழுத்து இயக்க போராட்டம் நடந்தது.
கோட்ட தலைவர் ராஜா தலைமை வகித்தார். செயலாளர் அருள்தாஸ் வரவேற்றார்.
மாநில துணைத்தலைவர் ராஜமாணிக்கம் துவக்கினார். கோட்ட துணை செயலாளர் முருகேசன், துணைத்தலைவர் அழகர்சாமி முன்னிலை வகித்தனர்.
கோட்ட பொருளாளர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.