/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மருத்துவமனையை தரம் உயர்த்த கையெழுத்து
/
மருத்துவமனையை தரம் உயர்த்த கையெழுத்து
ADDED : செப் 21, 2025 04:37 AM
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனைக்கு இணையாக அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை அலைக்கழிக்கக் கூடாது.
24 மணிநேரமும் டாக்டர்கள், நர்சுகள் பணியில் இருக்க வேண்டும் என்பன உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ,மார்க்சிஸ்ட் வத்தலக்குண்டு ஒன்றியம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. கிளை செயலாளர் மாரி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் ராஜா முன்னிலை வகித்தார். திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் துவக்கி வைத்தார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலாஜி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் வின்சென்ட், குணசீலன், பெருமாள்சாமி, சுரேஷ், பாண்டியம்மாள், பாண்டியன் , சித்ராதேவி பங்கேற்றனர்.
கிளை உறுப்பினர் சோனைமுத்தையா நன்றி கூறினார்.