/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் வெள்ளித்தேரோட்டம்
/
பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் வெள்ளித்தேரோட்டம்
ADDED : ஆக 16, 2025 02:50 AM

பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை யொட்டி வெள்ளித்தேரோட்டம் நடைபெற்றது.
பழநி முருகன் கோயிலின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோயிலில் ஜூலை 17 முதல் ஆடி லட்சார்ச்சனை துவங்கியது. ஆடி வெள்ளிக்கிழமைகளில் முத்தங்கி , மீனாட்சி , சந்தன காப்பு , விசாலாட்சி அலங்காரம், செய்யப்பட்டது. நேற்று தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது. தினசரி மாலை சிறப்பு அலங்காரத்துடன் ஒரு லட்சம் மலர்கள் துாவி அர்ச்சனை நடைபெற்றது.
நேற்று பெரியநாயகி அம்மனுக்கு மகா அபிஷேகம், தங்க கவச அலங்காரம் நடந்த நிலையில் வெள்ளி ரதத்தில் பெரியநாயகி அம்மன் எழுந்தருள இரவு 8:30 மணிக்கு வெள்ளி தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.