UPDATED : அக் 08, 2026 09:20 PM
ADDED : அக் 08, 2026 07:52 PM
அ நிறம் | அளவு
கன்னிவாடி: தர்மத்துப்பட்டி அருகே கோம்பை வனப்பகுதியில் பல நாட்களாக ஒற்றை யானை நடமாட்டம் உள்ளது. தீட்டுப்புலி, மயிலாடும்பாறை, சன்னாசியப்பன் கோயில், கன்னிமார் கோயில் பகுதிகளில் யானை உலா வருகிறது.
பகலில் அடர்ந்த மரங்களுக்கு இடையே தஞ்சமடைந்து இரவு நேரங்களில் வாழை, தென்னை தோப்புகளில் புகுகிறது. 100க்கும் மேற்பட்ட வாழை, தென்னை கன்றுகளை சேதப்படுத்தி, வாழைத்தார்களை துவம்சம் செய்கிறது. அப்பகுதி விவசாயிகள் பகலிலும் நடமாட முடியாமல் அச்சத்தில் உள்ளனர். தகவலறிந்த வனத்துறையினர் அப்பகுதியில் விசாரணை நடத்தினர்.
