/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எஸ்.ஐ.ஆர்., படிவத்தால் வாக்காளர் பெயர் நீங்காது கலெக்டர் சரவணன் தகவல்
/
எஸ்.ஐ.ஆர்., படிவத்தால் வாக்காளர் பெயர் நீங்காது கலெக்டர் சரவணன் தகவல்
எஸ்.ஐ.ஆர்., படிவத்தால் வாக்காளர் பெயர் நீங்காது கலெக்டர் சரவணன் தகவல்
எஸ்.ஐ.ஆர்., படிவத்தால் வாக்காளர் பெயர் நீங்காது கலெக்டர் சரவணன் தகவல்
ADDED : நவ 21, 2025 05:20 AM
திண்டுக்கல்: '' எஸ்.ஐ.ஆர்., படிவத்தால் எந்த வாக்காளரின் பெயரும் நீக்கப்படாது'' என கலெக்டர் சரவணன் கூறினார்.
அவர் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக(எஸ்.ஐ.ஆர்.,) 19,34,447 வாக்காளர்களுக்கும் படிவங்கள் வழங்கப்படும். 97 சதவீதம் பணி நிறைவடைந்துள்ளது.
2124 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் துணையுடன் படிவங்களை பூர்த்தி செய்யும் பணி நடக்கிறது.
பூர்த்தி செய்த படிவங்களை திரும்ப பெறுவதற்காக நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது வரை 30 சதவீத படிவங்கள் பெறப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக நவ.22, 23ல் மீண்டும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. படிவம் கிடைக்க பெறாத பொதுமக்கள் சிறப்பு முகாம்களிலே பெற்று கொள்ளலாம்.
மேலும் புதிய வாக்காளர்களாக சேர்வதற்கு படிவம் 6-ம் பெற்று கொள்ளலாம்.
'தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி படிவம் வழங்கப்படாத வீடுகளுக்கு குறைந்தபட்சம் 3 முறை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் தேடி செல்கின்றனர். ஒவ்வொருவருக்கும் 2 படிவங்கள் கொடுக்க வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் படிவங்கள் விநியோகிக்கும் பணி 91 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
அங்கேயே தங்கி படிவங்கள் பூர்த்தி செய்து திரும்ப பெற்று வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
படிவங்களை பூர்த்தி செய்வதற்கு பொதுமக்கள் குழப்பம் அடைய தேவையில்லை. சிறப்பு முகாம்களுக்கு வரும் பொதுமக்களுக்கு சிரமமின்றி நிரப்புவதற்கு வழிகாட்டப்படும். இறந்த வாக்காளர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் மட்டுமே நீக்கப்படுவார்கள்.
எஸ்.ஐ.ஆர்., படிவத்தால் எந்த வாக்காளரின் பெயரும் நீக்கப்படாது. நீக்கம் செய்யப்படும் பெயர்கள் குறித்த பட்டியல் தயார் செய்து தாலுகா, ஒன்றிய அலுவலகம் உட்பட அரசு அலுவலகங்களின் தகவல் பலகையில் ஒட்டப்படும். பழநி, திண்டுக்கல் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பதிவேற்றும் பணியும் நடந்து வருகிறது என்றார்.

