ADDED : நவ 19, 2025 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் பிறந்தநாள், பிர்சா முன்டா பிறந்தநாள், ஆச்சார்யா கிருபாளினி பிறந்த நாள், லாலா லஜபதிராய் நினைவுதினம், வ.உ.சிதம்பரனார் நினைவுதினம் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் அனுசரிக்கப்பட்டது.
மன்ற பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். நவரத்தினம் பேசினார். அருணகிரி, பழனியப்பன் கலந்துகொண்டனர். எஸ்.ஐ.ஆர்., க்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. டில்லியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பீகார் தேர்தலில் பா.ஜ.கூட்டணி வெற்றி பெற்றதை வரவேற்கும் விதமாக இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

