/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இறுதிக்கட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., பதிவேற்றம்
/
இறுதிக்கட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., பதிவேற்றம்
ADDED : டிச 12, 2025 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் (எஸ்.ஐ.ஆர்.,) நடக்கிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டசபை தொகுதிகளிலும் 2124 ஓட்டுச்சாவடிகளிலும் முகவர்கள் வாயிலாக வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி பூர்த்தி செய்து திரும்ப பெறப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை இணையதளம் மூலமாக தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்கு பதிவேற்றம் செய்யும் பணி அனைத்து இடங்களிலும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. திண்டுக்கல் மாநகராட்சியில் நடக்கும் பணியில் கல்லுாரி மாணவர்கள், தன்னார்வலர்கள். அனைத்து துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

