ADDED : டிச 10, 2024 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார் தாலுகா அலுவலகத்தில் நில அளவை களப்பணியாளர்கள் சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.
மாவட்ட பொருளாளர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் காந்திராஜன் முன்னிலை வகித்தார். தகுதி உள்ள நில அளவையருக்கு பதவி உயர்வு வழங்குதல், மாறுதல் நடைமுறையை நில அளவை பதிவேடுகள் துறையில் மாற்றி அமைத்தல், மனித திறனுக்கேற்ற குறியீடு வரையறுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்