தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்


UPDATED : அக் 28, 2026 11:47 PM

ADDED : அக் 28, 2026 04:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 11:47 PM ADDED : அக் 28, 2026 04:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நத்தம்: திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், நத்தம் என்.பி.ஆர்., கல்வி குழுமம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. இம்முகாமில் ரோபோட்டிக்ஸ், ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கலெக்டர் துர்கா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செல்வகுமார் தலைமை வகித்தார். என்.பி.ஆர்., கல்விக் குழுமத்தின் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புப் பிரிவு இயக்குநர் அருணா, பொறியியல், தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் செல்வபெருமாள், கலை, அறிவியல் கல்லுாரி முதல்வர் சரவணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர். என்.பி.ஆர்., கல்விக் குழும நிறுவன வளர்ச்சி, தொடர்புகள் இயக்குநர் ஆனந்த் பங்கேற்றார்.

மாணவர்களின் தனித்திறன்களை வளர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள தொழில்துறை திறன் மேம்பாட்டு ஆய்வகம், அடுத்த தலைமுறை புதுமை மையம், ஏ.ஐ.சி.டி.இ., ஐடியா ஆய்வகம் உள்ளிட்ட நவீன ஆய்வகங்களைச் சிறப்பு விருந்தினர்கள் பார்வையிட்டனர்.

கலெக்டர் துர்கா பேசுகையில், 'மாணவர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப துறைகளைத் தேர்ந்தெடுத்துப் பயில வேண்டும். ஆய்வக வசதிகள் கொண்ட கல்லுாரிகளில் பயின்று பகுப்பாய்வுத் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்' என்றார். ஏற்பாடுகளை என்.பி.ஆர்., கல்லுாரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us