ADDED : ஆக 28, 2026 06:44 PM
அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம், ஆக.29-
ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பாலிடெக்னிக் கல்லுாரியில் திறன் சார்ந்த அறிவை மேம்படுத்தும் வகையில் ‘மாணவர்களின் புதிய சிந்தனைகள்’ என்ற தலைப்பில் பல்வேறு நிகழ்ச்சிகளின் துவக்க விழா நடந்தது. முதல்வர் தினகரன் தலைமை வகித்தார். செப்.,4 வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. குறிப்பாக விமானங்களில் ஏற்படும் தவறுகளை முன்கூட்டியே கண்டறிதல், சரி செய்தல், தீர்வு காணுதல் போன்ற பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
